அடடா என் மீது தேவதை வாசனை காதல் இதுவோ
உனையே எங்கெங்கும் காட்சிகள் காட்டிடும் காதல் இதுவோ
உன்னை காணும், வரம் போதும், எதிர்காலம் வசம் வசம் வரும்
வழி பாதை மரம் யாவும், எனக்காக மழை மழை தரும்
யாரோ உன்னை என்னை யார் சேர்த்ததோ
யாரோ வாசம் தன்னை யார் பார்த்ததோ
உயிரில் ஒரு கோடி வானவில் பூத்திடும் காதல் இதுவோ
எதிரே நீ வந்தால் வானவில் தோன்றிடும் காதல் அதுவோ
ரம்யம் ததும்பும் கனவு, உன்னை கண்டதும் பிறந்ததே
கண்களில் வழியும் நீரில், இன்று சக்கரை திறலுதே
போய் வரும் வீதியில் ஏனோ, புது வாசனை கமலுதே
காதலின் பாடலை இங்கே, இரு ஜீவன் பாடிடுதே
ல ல ல ல லால..லால..
ல ல ல ல ல ல லால..லா..
மௌனம் வந்து இடியை போல, மனதில் மீது விழுந்ததோ
காதலிலே நம்மை நாம் இழந்தோம், உண்மை நாம் உணர்ந்தோம்
ஏன் கலந்தோம், நம் கனவில், நாம் அலைந்தோம்
காற்றினில் அலையும் இறகு, எந்த பறவை உதிர்ததோ
காதலில் மயங்கும் மனது, அந்த கடவுளும் கொடுத்ததோ
பூட்டிய கதவின் இடுக்கில், புது வெளிச்சம் நுழைந்ததோ
தாய்மையின் விரலை கொண்டு, நம்மை காதலும் வருடுதோ
உன்னை கண்ட நாளில் இருந்து, எனது வாழ்கை கிடைத்ததே
என்னுயிரை திறக்கும் சாவி, உனது உயிரில் இருக்குதே
காதலியே இது வேசம் இல்லை, இங்கு பேதம் இல்லை
ஏதும் இல்லை, பனி துளியில் சாயம் இல்லை
அடடா என் மீது தேவதை வாசனை காதல் இதுவோ
உனையே எங்கெங்கும் காட்சிகள் காட்டிடும் காதல் இதுவோ
உன்னை காணும், வரம் போதும், எதிர்காலம் வசம் வசம் வரும்
வழி பாதை மரம் யாவும், எனக்காக மழை மழை தரும்
யாரோ உன்னை என்னை யார் சேர்த்ததோ
யாரோ வாசம் தன்னை யார் பார்த்ததோ
உயிரில் ஒரு கோடி வானவில் பூத்திடும் காதல் இதுவோ
எதிரே நீ வந்தால் வானவில் தோன்றிடும் காதல் அதுவோ
படம்: பதினாறு
இசை: யுவன் ஷங்கர் ராஜா
Jyothika should have got an award!
even a special recognision would have been good...but she got nothing...why?!
she was amazing in Mozhi