Monday, May 12, 2008

kalyaana maalai kondaadum penne- puthu puthu arthangal lyrics

கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டைக் கேளு உண்மைகள் சொல்வேன்
ஸ்ருதியோடு லயம் போலவே
இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே

வாலிபங்கள் ஓடும் வயதாகக் கூடும் ஆனாலும் அன்பு மாறாதது
மாலையிடும் சொந்தம் முடி போட்ட பந்தம் பிரிவென்னும் சொல்லே அறியாதது
அழகான மனைவி அன்பான துணைவி அமைந்தாலெ பேரின்பமே
மடிமீது துயில சரசங்கள் பயில மோகங்கள் ஆரம்பமே
நல்ல மனையாளின் நேச ஒருகோடி
நெஞ்சம் எனும் வீணை பாடுமேதோழி
சந்தோஷ சாம்ராஜ்யமே...

கூவுகின்ற குயிலை கூட்டுகுள் வைத்து பாடென்று சொன்னால் பாடாதம்மா
சோலை மயில் தன்னை சிறைவைத்துப் பூட்டி ஆடென்று சொன்னால் ஆடாதம்மா
நாள்தோறும் ரசிகன் பராட்டும் கலைஞன் காவல்கள் எனக்கில்லையே
சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கும் சிரிக்காத நாள் இல்லையே
துக்கம் சில நேரம் பொங்கி வரும் போதும்
மக்கள் மனம் போல பாடுவேன் கண்ணே
என் சோகம் என்னோடுதான்...

No comments: